வாடகை

“உச்சக்கட்ட சாலை நெரிசலில் சென்னை மாநகர போக்குவரத்து எப்போதும் இன்ச் இன்ச்சாக நகரும். அன்று மாண்புமிகு முதல்வரும் துணை முதல்வரும் வருகை தர, சாலை அவர்களின் கட்சி போஸ்டர்களும் பனர்களும், மாவிலை தோரணங்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதனால் இன்ச் சென்டிமீட்டர் தூரமாக குறைய, வண்ண விளக்குகள் வெளியில் இருந்தாலும் குழலியின் மனம் மட்டும் இருட்டாய் இருந்தது.

நேற்று நடந்த சம்பவங்களும், அதை செய்த மனிதர்களும் கண்முன்னே காட்சியாய் வந்து சென்றனர். அங்கங்கே ரீங்காரம் இட்டுக்கொண்ட வாகனங்கள், அவளின் மன எரிச்சலை மேலும் ஏற்றியது. சத்தத்தின் மூலமாவது அவைகள் பேசும் சுதந்திரம் பெற்றிருந்ததாலும், அது தனக்கு இல்லாமல் போனதை எண்ணும் போதும், உரக்க அடிக்கும் ஹார்ன் சத்தம் மீது ஒரு வகையான பொறாமையும் கொண்டாள், குழலி.

மேல் வீட்டில் 14 வருடமும், கீழ் வீட்டில் 3 வருடமுமாக, மொத்தம் 17 வருடங்களை அங்கே குழலியின் குடும்பம் கழித்திருந்தது. முன் வருடங்களில் அவளுக்கு விவரம் தெரியாததால், எவரையும் பெருசாக கண்டு கொள்ள மாட்டாள். பதின் பருவம் அவளை ஆட்கொண்டபோதும், எதுவும் பெருசாக அலட்டிக்கொள்வதில்லை. அப்போது எதிர் வீட்டில் குடி இருந்தவரின் குடும்பம் தன் பையனை பொத்தி பொத்தி வளர்த்தபோது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆண் நண்பர்கள் பெண் நண்பர்கள் அவளுக்கு பள்ளியில் இருந்தார்கள். ஆசிரியர்களுக்கும் அதில் ஆட்சேபனையம் இருந்ததில்லை. ஒட்டி உறவாட மாட்டாள். அளவோடு பழகத் தெரிந்தவள். படிப்பிற்கு யார் என்ன கேட்டாலும் செய்யவாள். அதை வீட்டில் எதிர்க்கவும் மாட்டார்கள்.

ஏழாம் வகுப்பின் அரையாண்டு தேர்வு நடக்க இருந்தது. டீனேஜ் எனப்படும் பருவம், சொல் பேச்சும் கேட்காது, சுய புத்தியும் மங்கி இருக்கும், எல்லாவற்றையும் வினாவும். இது ஹார்மோனிகளின் கூத்து தான். ஆணோ பெண்ணோ அனைவரும் இதை கடந்து தான் வர வேண்டி இருக்கும். சட்டைகள் பாவாடைகள் கொள்ளாது. முகம் விகாரமாகும். உருவத் தோற்றம் அழகாய் இருந்தாலும், அசிங்கமாய் தான் இருப்பதாக உணரும். இதை எல்லாம் உணர்ந்ததாலோ என்னவோ அவளின் தந்தை முழு பேச்சுரிமை வழங்கி இருந்தார்.

தன் ஆண் தோழன் படிப்பு சொல்லி தர கேட்டு இருந்ததை தந்தையிடம் தெரிவித்தாள். குழலியின் தந்தை அவன் வீட்டுக்கு சென்று அந்த பையனின் பெற்றோரிடம் பேசி, வீட்டுக்கு கூட்டி வந்தார். குழலிக்கு ஒரே மகிழ்ச்சி. கணிதப்பாடம் வேற, குழலியை கையிலே பிடிக்க முடியாது. சோர்வே அடையாமல், தன் தந்தை வேளாவேளைக்கு போட்டு தந்த காபியும், மத்திய சாப்பாடும், இருவரையும் அதிக மதிப்பெண் எடுக்க வைத்தது. பாடம் முடிந்ததும் அவனை வீட்டில் கொண்டு போய்விட்டார், குழலியின் தந்தை.

இப்படி வீடு இவளையும் இவளின் நியாயமான கோரிக்கைகளையும் தட்டிக்கொண்டு வளர்த்தது. ஆனால் சுற்றம் சும்மா இல்லை.

சாதியில் பாகுபாடு பார்த்தது அந்த காலம். இன்று பணம் தான். பணம் இருப்பவன் பிழைப்பான். பாதாளம் வரை பாயும் பணம், அறம் பார்க்காது. அறம், தர்மம், நியாயம் கடைபிடிக்க கற்றுக்கொள்ள வேண்டிய நேரத்தில், பணத்தின் அருமையை சுற்றம் அவளை கன்னத்தில் அறைந்து கூறி கொண்டே இருந்தது.

வாடகை வீடு அல்லவா? கேட்கவே வேண்டாம். ‘இங்க போக கூடாது. அங்க செல்ல கூடாது’ என கூறுவது வழக்கம் தான். காசு கொடுத்து தங்கி இருந்தாலும், அடிமை தான் அந்த வீட்டு முதலாளிக்கு. எழுதி கொடுக்காத அடிமை.

கல்லூரி இரண்டாம் ஆண்டின் போது கீழே குடி மாறி வந்தார்கள். மேலே இருந்தவரை பெரிதாக புரியாத அரசியல், கீழே வந்தவுடன் பளீச்சென புரிந்தது அவளுக்கு. தெளிவான பார்வையும், வயதின் முதிர்ச்சியும் ஒரு வகை காரணம். எத்தனை அடித்தாலும் வீட்டில் கடைசி வரை தன் தாய் தந்தை பிடித்த அறம் மற்றொரு காரணம்.

வாடகைக்கு குடி இருக்கும் ஆட்கள் பணத்தை முதலாளிக்கு அள்ளி கொடுக்கும் எந்திரங்கள். பணமும் கொடுத்து அடிமையும் ஆகி இருப்பது இவர்களாக மட்டும் தான் இருக்க முடியும். பெய்யென பெய்யும் மழை, வந்தால் வெள்ளமாய் வந்து சூறையாடும். பொய்த்து வெப்பமாய், வறட்சியை கொண்டு வந்து சேர்க்கும். அது சரி, சேமிக்கவும் தவறி, மரங்களையும் வெட்டி, மனிதன் தன் மனித தன்மையை இழந்து, இயற்கை தாயை கோவப்படுத்துவதன் வெளிப்பாடு, இயற்கையின் சீற்றம். இதிலும், விழித்துக்கொள்ளாது நம் மனித இனம். அதிகார வர்க்கம் அதிகாரம் செலுத்தும். அந்த சுழலில் சிக்கித் தவித்து, முன் செல்ல ஆதங்க படும்,போராடும், குழலியின் குடும்பம் போன்ற பல குடும்பம், புயலில் சிக்கிய பாய்மர கப்பல் தான்.

இயற்கை இவளுக்கு மட்டும் பரிதாபம் பார்க்குமா என்ன? மழையும் வறட்சியும் பொது. அதில், கஷ்டப்படுவது அதிகம் யார்? அதிகார வர்க்கம் இல்லை. ஆளப்படும் வர்க்கம் தான். இவர்கள் வீட்டின் குழாயின் லீவர் மட்டும் மூடி இருக்கும். அங்கு சொந்த வீட்டில் தங்கி இருப்போருக்கு குழாயில் தண்ணி வரும். பெண் பிள்ளைகள் இருக்கும் இவர்கள் வீட்டிற்கு ஒரு நாளைக்கு பத்து குடம் தான். காசு பணம் கொடுக்கையில் முகத்தில் இருப்பது போலி பற்களாக இருந்தாலும், இளித்துக்கொண்டு வாங்குபவர்களுக்கு, பிரெச்சனை என்றால், இரண்டு கிலோமீட்டர் அப்பால் இருந்தாலும் வந்ததில்லை. தண்ணீருக்கு தனி காசு, அதை பகிர்ந்து கொள்வார்களாம் சரி பாதியாக. உழைப்பும், மன உளைச்சலும் நீ வாடகைக்கு இருப்பதால் இந்த சுதந்திர இந்தியாவில் தாங்கி கொள்ள தான் வேண்டும்.

சுழலில் சிக்கி தவித்தாலும், குருவி கூடாய் சேர்த்ததும், வங்கியின் கடனும் சேர்த்து, ஒரு சொந்த வீட்டை கட்டி கூடி ஏற ஏற்பாடுகள் நடந்தது. மூன்று கட்டமாய் சாமான்கள் எடுத்துச்செல்லப்பட்டது. கடைசி பெட்டிகளில், குழலியின் புத்தகங்கள் இடம் பெற்றிருந்தது. விடுக்கென அதில் கடைசி பக்கத்தை கிழித்தவுடன், குழலிக்கு மூக்கின் மீது கோவம் வந்தது. அவன் வீடு தான். ஆனால் அவன் புத்தகம் இல்லையே. இது அவளின் புத்தகம். கேட்டிருந்தால், இவளே கொடுத்து இருப்பாள். இங்கிதம் அற்ற இவர்களிடம் பேச்சு வேண்டாம் என அவள் தந்தை சைகையிட, இவள் கண்கள் மட்டும் கொந்தளித்தது. சிவந்த கண்களுடன் மனதை அடக்கிக்கொண்டு இருந்தாள்.

இவர்களின் அட்வான்ஸ் காசு அவர்களிடம் இருந்தாலும், அவர்கள் விட்டு போயிருந்த ஓட்டை உடைசலையெல்லாம் தங்கி இருந்த பாவத்திற்கு இவர்கள் செலவழித்து செய்து தர வேண்டுமாம். இதில் தான் நியாயமாய் கேட்பதாய் சாட்சி சொல்லவேண்டி அங்கிருக்கும் மற்றொரு சொந்த வீட்டுக்காரி, இவர்களின் உற்ற நண்பியும் அவளது கணவரும் அந்த பஞ்சாயத்தின் நாட்டாமைகள். வாதியையும் பிரதிவாதியையும் தெரியாது இருந்தாலே காசு வாங்கி தீர்ப்பு சொல்லும் இந்த திருநாட்டில், இவர்களுக்கென அங்கே பேச ஒரு குரல் இல்லை. அது சரி, இவர்களுக்கே அந்த உரிமை இல்லை.

சொத்து தன பேரில் வைத்திருக்கும் அந்த காண்டாமிருகம்,

“”நானே கஷ்டத்துல இருக்கேன். நீங்களும் போயாச்சு, இன்னொரு வாடகை ஆளும் காலி பன்றேன்னு சொல்லிட்டாங்க. பொண்ணுக்கு பிரசவ செலவு வேற ஒன்னு இருபது ஆச்சு.”” என்று நீட்டி முறித்தாள்.

“”கல்யாணம் பண்ணி வெச்சா தல தீபாவளி, பொங்கல், சீமந்தம், பிரசவம், அதுக்கு சீரு என இருப்பதை தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க. இதெல்லாம் முடியாதுனா கல்யாணம் பண்ணி வெக்க கூடாது. இப்படி நீ சீர் செய்ய எங்கப்பா உயிர் இருக்கிறவரை உன்கிட்ட வாடகைக்கு இருக்கணுமா?”” என்று கேட்க குழலியின் உதடுகள் துடித்தன.

ஆரவாரம் இல்லாமல்,”” உங்க கஷ்டத்தை நீங்க வாய்விட்டு சொல்றீங்க. நான் சொல்லல. அவ்ளோதான். எல்லார்க்கும் பிரெச்சனை இருந்துட்டு தான் இருக்கு.”” என்றார் குழலியின் தந்தை.

திறந்த வீட்டில் நாய் நுழைவது போல் முன்னொரு முறை வந்து வீட்டை நோட்டம் விட்டிருந்தார்கள். காலி செய்ய இருப்பதால், முடிந்தவரை இவர்களை வைத்து தன வேலையை சாதித்து கொள்ள ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டில் பிறந்த இளம் பிஞ்சை பூட்டி வைத்து விட்டு, தம்பதி சகிதமாய் இன்ஸ்பெக்க்ஷன் மூன்று நாட்களாக நடந்தது.

தண்ணீர் பிரெச்சனை போது எட்டிப்பார்க்காது, இவர்களின் போனை கூட எடுக்காத இவர்கள், நுழைந்தவுடன் கேட்டது, “”என்ன பா போன் பண்றனு சொன்ன, போனையும் காணும், சத்தத்தையும் காணும், அப்டியே ஓடி போய்ட்டியோனு நெனச்சேன்”” என்று ஈவு இரக்கம் இல்லாமல் சொல்லை தொடுத்தார்கள்.

சாமானியனின் நண்பனும் சொல் தான், எதிரியும் சொல் தான். அதுவரை அமைதியாய் இருந்த குழலியின் தந்தையின் கண்கள் சிவந்தன. எதுவும் பேச கூடாது என்ற குழலியின் மீது செலுத்தப்பட்ட கட்டளையை அவளால் மீற முடியவில்லை. கைகள் உதறின. எடுத்து வைத்திருந்த சாமானை, கலைத்துவிட்டு மீண்டும் அடுக்கினாள்.

ஒருவழியாக அந்த மிருகங்களின் பண ஆசைவெறி அடங்கும் அளவிற்கு வேலையை முடித்து, சாவியை கொடுத்த குழலியின் தந்தையிடம், சிரித்துக்கொண்டே,

“”பரவாலேயே. அப்படியே வீடு வெள்ள அடிச்சு குடுத்துட்டு போனா நல்லா தான் இருக்கும்”” என்றார் வீட்டின் முதலாளி.

இந்த பேரமும் பேச்சும், தன பேரனை ஆஸ்பத்ரியிலிருந்து கூட்டி வரும் போது, அந்த மருத்துவரிடம் பேசி இருக்க முடியுமா?

சூப்பர்மார்கெட்டில் பேரம் பேசினால் அசிங்கம் என, ரெண்டு கிலோ நூறு கிராமிற்கும் விலையை மதிப்பீடு செய்யும் கணினியிடம், கேட்கும் காசை கொடுத்து விட்டு வருகிறோம். அண்ணாச்சி கடையில், இரண்டு கிலோவிற்கு, ரெண்டு இரநூறு தரும் அவரிடம், பேரம் பேசுவோம். அதில் அசிங்கம் பார்ப்பதில்லை. வெற்றியாகவே, பிறரிடம் பெருமை பேசும் நம் கஞ்சத்தனமும், பெருந்தன்மை இல்லாத மனமும் இருக்கையில், மனித இனமாய் பிறந்ததற்கு குழலி கூசினாள்.

ஒட்டி இருந்த மிச்ச அறம் அந்த குடியிருப்பை விட்டு சட்டி பானையுடன், வயிற்றெரிச்சலோடு வெளியேறியது. குழலியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கே இவள் சாபம் விட்டு விடுவாளோ என்ற எண்ணம் மேலோங்கி இருந்ததால், ‘அவர் அவர் வினை அவரை தாக்கும்’ என்ற எண்ணத்தோடு மட்டும் வெளியேற சொன்னார் குழலியின் தந்தை.

அங்கு மொட்டை மாடிக்கு கதவிட்டு, தாளிட்டு, பூட்டு போட்டு இருக்கும். சாவி ஓனர்களுக்கு மட்டும் தான். புது வீட்டில் மொட்டைமாடி ஏறி எத்தனை நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம். வாசல் கதவை திறந்து படியில் எத்தனை நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்து பொறுமையாய் தாயின் காபியை குடிக்க முடியும் என்ற சுதந்திரம், அவளை வானில் சிறகே இல்லாமல் பறக்கச் செய்தது.

நினைவு நிதர்சனத்திற்கு திரும்புகையில், அவள் தரைக்கப்பல் என்னும் மிதவை பேருந்தை விட்டு இறங்கினாள். அங்கிருந்து இன்னொரு பேருந்து பிடித்து, கோபத்தையும் எரிச்சலையும் வெளியில் காட்ட முடியாமல், வேகமாய் வீட்டை நோக்கி நடந்தாள். வாசலில் அவளை அரவணைக்க காத்திருந்த நாய், ஓடி வந்து கட்டி தழுவியது. உலக இன்பம் எல்லாம் அந்த ஒரு தழுவல் தந்தது. மனமும் லேசாயிற்று.”

—-keerthiga Ganesan

सुनो! चाँद को रोका है एक और रात के लिए।

“सुनो!चाँद को रोका है
एक और रात के लिए
तुम आ रहे हो ना
मुलाकात के लिए
वक्त ना हो अगर
फिर इस बार भी
तो कोई गिला नहीं
बस एक टक तुम
आसमां देख लेना
मैंने घर बना रखा है
इसे आज रात के लिए
फुरसत गर इतनी भर
भी न मिले
तब भी कोई गिला नहीं
फिर उधार लेंगे आसमां
किसी और रात के लिए।”

-Vikas Rathore